Friday, June 26, 2009

01.01.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி...

தேதி : 01.01.2020

1.எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.

2.வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.

3.இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை

4.காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.

5. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.

6.நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி

7.பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு

8.திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.


9. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு

10. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.

11. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.

12. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

13. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

14.வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.

இத்துடன் இச்செய்தி முடிவடைகிறது.மீண்டும் செய்திகள் இரவு 7:30 மணிக்கு .செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எதாவது நியூஸ் சேனல் லை பார்க்கவும் .உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் "கோகுல்" ..நன்றி!

No comments: